How to apply needs loan in Tamil

MSME.. பிணையில்லாத அவசர கால கடன்.. இது சிறு தொழில்களுக்கு நல்ல வாய்ப்பு..!

2119

MSME.. பிணையில்லாத அவசர கால கடன்.. இது சிறு தொழில்களுக்கு நல்ல வாய்ப்பு..!

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக மத்திய அரசு ஒரு ஊக்குவிப்பு திட்டத்தினை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது.

அது MSME-க்களுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக 3 லட்சம் கோடி ரூபாய் அவசர கால கடன் உதவி திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது புதியதாக தொழில் தொடங்க நினைப்போருக்கும், சிறு தொழில் செய்வோருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. அதிலும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்துள்ள எம்எஸ்எம்இ துறைக்கு இந்த திட்டம் துணை புரியும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அரிஜித் பாசு எதிர்பார்க்கிறார்.

எம்எஸ்எம்இ துறையினை பொறுத்த வரையில் அவர்களுக்கு நிறைய கையிருப்பு தேவைப்படுகிறது. ஆக இந்த நிலையில் மத்திய அரசின் திட்டம் இதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

நிதியமைச்சரின் தரவுகளின் படி, ஜூன் 5ம் தேதி வரை 8,320 கோடி ரூபாய் மதிப்புள்ள கடனை 12 மாநிலங்களில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அனுமதித்துள்ளன. ஏற்கனவே 17,904 கோடி ரூபாய் கடனை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

இந்த சமயத்தில் தனி நபர் கடன் 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இதே எம்எஸ்எம்இ கடன் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதிலும் தற்போது நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், வணிக கடன்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கவில்லை.

 

எனினும் நுகர்வு அதிகரிக்கும் போது தேவை அதிகமாகும். தேவை அதிகரிக்கும் போது சிறு தொழில் கடன்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது ஆறு மாத பின்னடைவை சந்திக்க கூடும்.

 

கடந்த மே 16 அன்று சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஒரு விரிவான பொருளாதார தொகுப்பினை அரசாங்கம் அறிவித்தது. இதன் மூலம் 3 டிரில்லியன் ரூபாய் பிணை இல்லா கடனை வழங்கவும் அறிவிக்கப்பட்டது. இந்த அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த கடனுக்கு 9.25 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வட்டி விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில் ஜூன் 5ம் தேதி நிலவரப்படி, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் 17,705.64 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 8,320.24 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளது.

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு நன்றி




One thought on “MSME.. பிணையில்லாத அவசர கால கடன்.. இது சிறு தொழில்களுக்கு நல்ல வாய்ப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *