நித்ய கல்யாணி

முன்னேற்றம் தரும் மூலிகை பயிர்கள் – நித்ய கல்யாணி

5238

முன்னேற்றம் தரும் மூலிகை பயிர்கள் | நித்ய கல்யாணி | நித்ய கல்யாணி விவசாயம்

சிறப்பு மற்றும் தேவை – புற்றுநோயை குணப்படுத்தும் நித்ய கல்யாணி

நித்ய கல்யாணி தாவரத்திற்கு தற்போது திடீரென புகழ் கூடியுள்ளது. இத்தாவரத்தின் வேரில் உள்ள குறிப்பிட்ட மருந்துப்பொருள் புற்றுநோய் மருத்துவத்தில் கீமோ தெரபி சிகிச்சைக்கு பயன்படுவதாக அமெரிக்கா கண்டறிந்துள்ளது. இதனால், இந்தியாவிலிருந்து உலக நாடுகள் முழுவதும் தற்போது அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் தாவரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது நித்ய கல்யாணி.

ஒரு ரசாயன மருந்தாக மருத்துவமனையில் ஊசி மூலம் செலுத்தப்படும்போது, ‘சூப்பர் மருந்து’ என்று அதைப் புகழும் நம் மக்கள், நம்நாட்டு மருத்துவர்கள் அதையே நித்யகல்யாணி இலைகளின் சாறை காலை மாலை இருவேளையும் எடுத்துக்கொள்ளச் சொன்னால் அதன் அருமையை மதிப்பதில்லை.

தற்போது புற்றுநோய்க்காக மட்டுமல்லாமல் நித்யகல்யாணியின் வேரில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் உலக அளவில் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. நீரிழிவு சிகிச்சைக்காக இதன் வேரை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறோம். 400 அல்லது 500 மிலி கிராம் அளவு வேரின் சாறை கஷாயமாக இரண்டு வேளையும் சாப்பிட்டுவந்தால் நீரிழிவு நல்ல கட்டுக்குள் வரும் அல்லது வேரை காய வைத்து பொடி செய்தும் சாப்பிடலாம்.
-ஆயுர்வேத மருத்துவர் சிவகுமார்.

 

உலகிலேயே நம் இந்தியாவில் மட்டுமே நித்யகல்யாணி தாவரத்தை விளைவிக்க முடிவதை நாம் பெருமையாக கருதவேண்டும். தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தரிசு நிலங்களில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. நம் நாட்டில் இயற்கையாக கிடைக்கும் நித்யகல்யாணி தாவரத்தை நாம் முழுமையாக பயன்படுத்தி பலனை அடைய வேண்டும்!
– இந்துமதி

சாகுபடி முறை மற்றும் வருமானம் :

இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சுமார் 1000 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் நித்தியகல்யாணி மானாவாரிப் பயிராக அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 2,000 டன் காய்ந்த இலைகள் மற்றும் வேர்கள் ஏற்றுமதி செய்ய்படுகிறது. நித்தியகல்யாணி இலையிலுள்ள ஆல்கலாய்டுகள் லுகெமியா இரத்தப் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.

லக்னோவிலுள்ள மத்திய மருந்து மற்றும் மணமூட்டும் பயிர்கள் ஆராய்ச்சி மையத்திலிருந்து வெளியிடப்பட்ட ‘நிர்மல்’ மற்றும் ‘தாவல்’ என்ற புதிய இரகங்கள் மானாவாரியில் 1200 கிலோ உலர் இலைகளும்,800 கிலோ வேர்களும் தரவல்லது. அதிக பலனையும் வருமானத்தையும பெறுவதற்கு நித்தியகல்யாணி செடிகளை நாற்றங்காலில் விதைத்து நாற்றுகளை நடவு செய்வது சிறந்தது. ஒரு எக்டரில் நேரடி விதைப்பிற்கு 2.5 கிலோ விதையும், நாற்றாங்காலில் விதைக்க 500 கிராம் விதையும் போதுமானது. விதைகள் சிறியதாக இருப்பதால் ஒரு கிலோ விதைக்கு 10 கிலோ மணல் என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும். செடிகள் நட்ட ஓர் ஆண்டில் முதிர்ச்சி அடைந்த வேர்களை அறுவடை செய்யலாம். ஐந்தாவது மற்றும் ஏழாவது மாதங்களில் இலைகளை மட்டும் அறுவடை செய்யலாம். செடிகளில் வேர்களை எடுப்பதற்கு விதைத்த ஓர் ஆண்டு கழித்து செடிகளை 10 செ.மீ உயரத்தில் வெட்டி இலை, தண்டு மற்றும் காய்களை எடுக்க வேண்டும். வேர்களிலுள்ள மண்ணைச் சுத்தப்படுத்திய பிறகு நிழலில் சிறிது காலம் உலர்த்தி சிறிய கட்டுகளாக் கட்டி விற்பனைக்கு அனுப்பலாம். மானாவாரிப் பயிரில் எக்டருக்கு 750 கிலோ உலர்ந்த வேர்களும், 1000 கிலோ தண்டுகளும், 1000 கிலோ இலைகளும் விளைச்சலைப் பெறலாம். மானாவாரியில் ஒரு எக்டருக்கு வேர்களின் அறுவடை மூலம் ரூ.50,000 வரை வருமானம் பெறலாம்.

இப்பயிரில் வேரியல்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் மருந்து மற்றும் மணமூட்டும் பயிர்கள் துறையில் சடுதி மாற்றம் மற்றும் அதிக விளைச்சலுக்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Buy Nattu Marunthu

keywords : நித்ய கல்யாணி, நித்திய கல்யாணி in english, நித்திய கல்யாணி இலை பயன்கள், நித்திய கல்யாணி பயன்கள், நித்ய கல்யாணி பயன்கள், பட்டி பூ பயன்கள், பட்டி பூ பயன்கள், நித்ய கல்யாணி விவசாயம், மூலிகை மருத்துவம்

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *