இலவச நாட்டுக் கோழி

நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க அரசு மானியம்

2886

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வளர்க்கும் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

து குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டு ஒரு பயனாளிக்கு 1,000 நாட்டுக் கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தங்களது குடியிருப்பு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொண்டு விண்ணப்பம் செய்யலாம்.

ஒரு கோழி குஞ்சு ரூ.30 வீதம் 1000 கோழிக்குஞ்சுகளுக்கான கொள்முதல் தொகை ரூ.30 ஆயிரமாகும். இதில், 50 சதவீதம் மானியம் என ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு கோழிக்குஞ்சு ஒன்றுக்கு 1.5 கி.கி. தீவனம் கொள்முதல் செய்ய ரூ.30 வீதம் 1,000 கோழிக்குஞ்சுகளுக்கு 50 சதவீதம் மானியமாக ரூ.22 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. குஞ்சு பொரிப்பான் ஒன்று கொள்முதல் செய்ய ரூ.37, 500 மானியமாக வழங்கப்படுகிறது.

நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க முனைபவர்களுக்கு அரசு மானியத்துடன் எளியமுறை கடன் வசதி!

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 2,500 சதுர அடி நிலம் ஒரே இடத்தில் உள்ளவராக இருக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட கிராம ஊராட்சியில் நிரந்தர குடியிருப்பு உள்ளவராக இருக்க வேண்டும்.

கணவனை இழந்த கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுபாலினத்தோர், உடல் ஊனமுற்றோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு கோழிப்பண்ணையை நிலைநிறுத்தி நடத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
One thought on “நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க அரசு மானியம்

  1. Johncyrani

    நாட்டு கோழி குஞ்சு ரூ.30 வீதம் 1000 கோழிக்குஞ்சுகளுக்கான கொள்முதல் தொகை ரூ.30 ஆயிரமாகும். இதில், 50 சதவீதம் மானியம் என ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு கோழிக்குஞ்சு ஒன்றுக்கு 1.5 கி.கி. தீவனம் கொள்முதல் செய்ய ரூ.30 வீதம் 1,000 கோழிக்குஞ்சுகளுக்கு 50 சதவீதம் மானியமாக ரூ.22 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. குஞ்சு பொரிப்பான் ஒன்று கொள்முதல் செய்ய ரூ.37, 500 மானியமாக வழங்கப்படுகிறது.

    நாட்டுக்கோழிப் பண்ணை அரசு மானியத்துடன் அமைக்க விரும்புகிறேன்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *