கோழி

நல்ல சத்தான கோழி வளர்ப்பு தீவனங்கள்!

513

நல்ல சத்தான கோழி வளர்ப்பு தீவனங்கள் |  கோழி வளர்ப்பு

கோழி வளர்பில் தீவனப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. கோழி வளர்ப்புச் செலவின் 60-70 சதவிகிதம் அளவு தீவனத்திற்காகவே செலவிடப்படுகிறது. அவ்வாறு கொடுக்கும் தீவனம் வீணாகாமல் முழுமையாக கோழிகளால் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே ஒரு லாபகரமான பண்ணையை உருவாக்க முடியும்.

40க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் கோழிகளுக்கு தேவைப்படுகிறது. இவை நீர், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. கார்போஹைட்ரேட் (Carbohydrate) மற்றும் கொழுப்புக்களே (Fat) ஆற்றலுக்கு பிரதானமானவை. கொழுப்பில் கார்போஹைட்ரேட் விட 2.25 மடங்கு ஆற்றல் அதிகமாக உள்ளது.

பாரம்பரிய முறையில் கோழிகளுக்கு தானியப் பயிர்களான அரிசி, சோளம், கோதுமை, ஓட்ஸ், பார்லே போன்றவையும் மற்றும் உபதானியப் பொருட்களான நெல் / கோதுமை, உமி, தவிடு போன்றவைகளையும் தீவனமாகக் கொடுக்கலாம். மேலும் மீன் தோல் கழிவுகள், இறைச்சி கழிவுகள், சோயாபீன் எண்ணெய்க் கழிவுகள், கடலை மற்றும் எள்ளுப் புண்ணாக்கு போன்றவற்றையும் கோழித் தீவனமாகப் பயன்படுத்தலாம். இதோடு தாதுக்களும் விட்டமின்களும் கலந்து சரிவிகித உணவாகக் கொடுத்தல் வேண்டும்.

சோளம் – Maize

இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரித்தல் எளிதாகிறது. குறைந்தளவு புரதமும், அதிக ஆற்றலும் கொண்டது. லைசின், சல்ஃபர் அமினோ அமிலங்களைப் பெற்றுள்ளது. மஞ்சள் நிறச் சோளத்தில் விட்டமின் மற்றும் சோன்த்தோடஃபில் நிறமி நிறைந்துள்ளது. இந்த நிறமிகள் தான் சிலவகைப் பறவைகளின் மஞ்சள் தோலிற்குக் காரணம்.

பார்லே – Barley

இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் 15 சதவிகிதத்திற்கு மேல் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.

ஓட்ஸ் – Oats 

ஓட்ஸிலும் நார்ச்சத்து அதிகமிருப்பதால் 20 சதவிகித அளவே சேர்க்கவேண்டும். இதில் மாங்கனீசு சத்து அதிகம் இருப்பதால் கோழிகளில் கால் பிரச்சினை, இறகை பிடுங்கிக் கொள்ளுதல் மற்றும் தன்னின ஊன் ஊன்றுதல் போன்ற குறைபாடுகளை குறைக்க முடியும்.

கோதுமை – Wheat 

சோளத்திற்குப் பதில் அதிக ஆற்றல் அளிக்க கோதுமை பயன்படுகிறது.

கோதுமை தவிடு – Wheat bran

இந்த கோதுமை தவிட்டில் மாங்கனீஸ் பாஸ்பரசுடன் சிறிது நார்ச்சத்தும் மிகுந்துள்ளது.

கம்பு – Pearl millet 

கோதுமை போலவே நல்ல ஆற்றல் வழங்கியாக கம்பு செயல்படுகிறது.

அரிசி – Rice 

உடைந்த அரிசி குருணைகள் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது. கார்போஹைட்ரரேட் மிகுந்துள்ளது.

பாலிஸ் செய்யப்பட்ட அரிசி – Polished rice 

இது ஒரு சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகையால் 50 சதவிகிதம் வரை தீவனத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதில் சிறிது எண்ணெய்ச் சத்தும் உள்ளது. சரியாக பராமரிக்கப்படவில்லை எனில் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும்.

எண்ணெய் நீக்கப்பட்ட பாலிஸ் அரிசி – Deoiled rice polish

எண்ணெய் நீக்கப்பட்டதால் இதில் கொழுப்புச் சத்துக் குறைவே. எனினும் சாம்பல் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.

வெள்ளைச் சோளம் – Sorghum

இது மஞ்சள் சோளம் போன்றே ஊட்டச்சத்துக்களைப் பெற்று இருந்தாலும் அதை விட வெள்ளைச் சோளத்தில் புரதம் அதிகம். கோழிகள் விரும்பி உட்கொள்ளும். மேலும் இதில் சில அமினோ அமிலங்கள் புண்ணாக்கில் இருப்பதைக் காட்டில் அதிக அளவில் உள்ளன.

கடலைப்புண்ணாக்கு – Groundnut-cake

இதில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. 40 சதவிகிதம் வரை தீவனக் கலவையில் பயன்படுத்தலாம்.

மீன் தூள் – Fish-meal

இது ஒரு சிறந்த கோழித்தீவனம். இதில் விலங்குப் புரதம் அதிகமாக உள்ளது. இது எலும்பு மீனா அல்லது கலனில் அடைத்த மீனா என்பதைப் பொறுத்து பயன்படுத்தும் அளவு வேறுபடும். இந்திய மீன் துகள்களில் 45-55 சதவிகிதம் புரதம் உள்ளது. மீனில் செதில்கள் இருந்தால் தீவனத்தரம் குறையலாம். எனவே செதில்கள் இல்லாமல் இருப்பது நல்லது.

சுண்ணாம்புக்கல் – Limestone

சுண்ணாம்புச் சத்து அதாவது கால்சியம் மிகுந்தது. எனினும் 5 சதவிகிதம் மேல் கோழித் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.

கடற்சிப்பி ஓடு – Oyster-shell

இதில் 38 சதவிகிதம் வரை கால்சியம் இருப்பதுடன் சுவை மிகுந்தது. சுண்ணாம்பிற்குப் பதில் பயன்படுத்தப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு கால்டை துறை

 

Keywords: நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி 2021, கோழி வளர்ப்பு , நாட்டு கோழி வளர்ப்பு மானியம் 2020, நாட்டு கோழி வளர்ப்பு லாபம், இறைச்சி கோழி வளர்ப்பு முறை, நாட்டு கோழி வளர்ப்பு pdf

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *