சுயதொழில்

ஒட்டல் மற்றும் அழகு நிலையம் தொடங்க கடன்

1542

ஒட்டல் மற்றும் அழகு நிலையம் தொடங்க கடன்

பிரதம ந்திரியின் வேலைவாயப்பு உருவாக்கும் திட்டத்தில் புதிய தொழில் துவங்குபவர்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திட்டம் குறித்த தகவலை, இந்த பதிவில் பார்க்கலாம்.

இத்திட்டத்தில் 2021ல் 55 பேருக்கு ரூ.1.70 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு 177 பேருக்கு ரூ.5.10 கோடி மானியம் அளிக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. உற்பத்தி தொழிலுக்கு ரூ.25 லட்சமும், சேவை தொழிலுக்கு ரூ.10 லட்சமும் கடனாக வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் நகர்புறங்களுக்கு திட்டமதிப்பீட்டில் 25 சதவீதமும், ஊரக பகுதிகளுக்கு 35 சதவீதமும் மத்திய அரசு மானியமாக வழங்க உள்ளது. இந்த மானிய உதவியுடன், நீங்கள் என்னென்ன தொழில் தொடங்கலாம், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் கால்நடை தீவனம், ஆட்டோமொபைல் சர்வீஸ் சென்டர், பேக்கிரி, ஒட்டல், அழகு நிலையம் போன்ற உற்பத்தி தொழில்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் துவங்கி பயன்பெறலாம்.

விருப்பமுள்ளவர்கள் www.kviconline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் Agency DIC என குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மைய மேலாளரை 8925533998 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் முரளீதரன் கூறினார்.

தகுதிகள் (Eligibility):
குறைந்தபட்சம் வயது வரம்பு 18 ஆகும்.

ரூ.10 இலட்சத்திற்கு மேல் உற்பத்தி தொழில்கள் மற்றும் ரூ.5 இலட்சத்திற்கு மேல் சேவைத் தொழில்கள் துவங்க குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும்.

குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை.

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *