தேன்நெல்லி

2000 முதலீட்டில் தேன்நெல்லி, மாதம் ரூ 33,000 இலாபம்

4911

2000 முதலீட்டில் தேன்நெல்லி , மாதம் ரூ 33,000 இலாபம் : sirutholil

இன்று அனைத்து இடங்களிலும், தேனில் ஊறிய நெல்லி விற்பனை செய்வதை நாம் பார்த்து இருப்போம். மேலும் இதன் விலை சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்த தொழிலை தொடங்க பெரிய இடமோ, பெரிய அளவில் முதலிடோ தேவை இல்லை என்று கூர்கிறார். நெல்லையை சேர்ந்த திரு.சங்கர் அவர்கள். நமது சிறுதொழில்முனைவோர்.காம் இணைய இதழ்க்கு, அனுப்பிய கட்டுரையை காண்போம்.

இன்று, தேனில் ஊறிய நெல்லிக்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. அதற்கு பின் வரும் காரணகளே ஆதாரம்:

பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காகஅதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். இப்போது அந்த நெல்லிக்காய் ஜூஸை எப்படியெல்லாம் குடிக்க வேண்டும். அவ்வாறு குடிப்பதால், உடலுக்கு என்ன நன்மையெல்லாம் கிடைக்கும் என்பதனை பார்ப்போமா!!!

நீரிழிவு :

நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது.

உடல் எடை :

நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.

ஆஸ்துமா :

நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.

மலச்சிக்கல் :

நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

இரத்த சுத்திகரிப்பு :

நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சிறுநீர் எரிச்சல் :

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகையஎரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.

உடல் குளிர்ச்சி :

கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்ததாக இருக்கும்.

அதிகமான இரத்தப்போக்கு :

மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால்,சரிசெய்துவிடலாம்.

அழகான முகம் :

முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

இரத்தசோகை :

உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின்எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் கூடும்.

இதய நோய் :

இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம்.

சரும பிரச்சனைகள் :

நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம்.

கண் பார்வை :

நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும்.

முதுமைத் தோற்றம் :

நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதை தடுக்கும். தேன் நெல்லிக்காய் நெல்லிக்காய் சாப்பிட்டால் என்றும் இளமை கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிடலாம். கால்சியம், இரும்பு சத்துள்ள இந்த நெல்லிக்காய் தலைமுடியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நெல்லிக்காயை தேனில் கலந்து சாப்பிட்டால் இதய நோயாளிகளுக்கு நல்ல பலனளிக்கும்.

தேன் நெல்லி செய்முறை :

பெரிய நெல்லிக்காய் -அரை கிலோ
வெல்லம் – கால் கிலோ
தேன் – 3 ஸ்பூன்
எண்ணெய் -4 டீஸ்பூன்

செய்முறை:

பெரிய நெல்லிக்காயை நன்றாகக் கழுவி ஈரம் போக துடைத்துவிட்டு வைக்கவும். வாணலியில் எண்ணை விட்டு குறைந்த தீயில் நெல்லிக்காயை வதக்கவும். நெல்லிக்காய் மாறிச் சுருங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும். நெல்லிக்காய் ஆறியதும் அதன் மேல் உள்ள எண்ணையை மெல்லிய பருத்தி துணியால் ஒற்றியெடுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை நசுக்கிப் போட்டு 1 கப் தண்ணிர் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து காய்ச்சவும். கம்பிப்பாகு பதம் வந்ததும் இறக்கிவைத்து, தேன், நெல்லிக்காய்களைச் சேர்க்கவும். 2 நாளில் வெல்லம், நெல்லிக்காயில் நன்றாக ஊறியதும், பல நாட்கள்வரை கெடாமல் இருக்கும்.

கணக்கீடு :

4 கிலோ நெல்லிக்காய் 4*30. =120 ரூபாய்
1கிலோ தேன் = 200 ரூபாய்
1பிளாஸ்டிக் டப்பா = 10 ரூபாய்
20 டப்பா 20*10. =200 [1 டப்பா 250gms)
LABAL. 20*2 = 40 ரூபாய்
போக்குவரத்து =100 ரூபாய்

மொத்தம் :  670 ரூபாய்
வரவு 1கிலோ தேன் நெல்லி 500
4.5கிலோ தேன்நெல்லி 4.5*500=2250

ரூபாய் 10000 முதலீடு செய்தால், 33000 வருமானம் பெற முடியும். நிகர இலாபம் ரூபாய் 22000/-
மேலும் இந்த தொழிலை 2000 ருபாயில் ஆரம்பிக்க முடியும். வீட்டில் இருந்தே செய்ய முடியும். பெண்கள்களுக்கு ஏற்றது

மேலும், இந்த தொழிலை பற்றி முழு விவரம் இலவச பயற்சி பெற :

KVK – குன்றக்குடி
திருமதி : தேன்மொழி
04577 – 264288

 

Keywords: sirutholil, siru tholil seivathu eppadi, siru tholil ideas in tamil 2020, siru tholil certificate, siru thozhil vagaigal in tamil, siru tholil ideas in tamil 2021, siru kuru thozhil in tamil, siru tholil machine, தேன்நெல்லி

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *