how to get gas agency dealership in Tamil

ரூபாய் 10,000 முதலீட்டில் LPG கேஸ் ஏஜென்சி

16032

ரூபாய் 10,000 முதலீட்டில் LPG கேஸ் ஏஜென்சி | how to get gas agency dealership in Tamil

இன்றைய சூழ்நிலையில் படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு இந்த வியாபாரம் நாம் இருக்கும் ஊரிலேயே செய்ய முடியும் இந்த வியாபாரம் செய்வதற்கு தங்களிடம் ரூபாய் பத்தாயிரம் ஒரு இருசக்கர வாகனம் இருந்தால் போதுமானது. மிகச் சிறிய கிராமமாக இருந்தாலும் கூட நிச்சயமாக நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2000 வருமானம் என்பது உறுதியாகக் கிடைக்கும்.

 

 

சரி அது என்ன வியாபாரம் எப்படி செய்வது அந்த வாய்ப்பு எங்கே கிடைக்கும், என்பதை இப்போது பார்ப்போம் இந்த வியாபாரம் எல் பி ஜி கேஸ் உதவி ஏஜென்சி வியாபாரம்தான் இதை எப்படி செய்வது என்றால் கேஸ் ஏஜென்சி என்றாலே பொதுவாக நம் நினைவுக்கு வருவது அதற்கு பல லட்சங்களும் மிகப்பெரிய குடோன் தேவைப்படும் இந்த வேலையெல்லாம் அல்லது வியாபாரம் எல்லாம் ஊரில் மிகவும்
முக்கியமானவர்கள் பெரிய பெரிய பணக்காரர்கள் மட்டுமே செய்ய முடியும் என்று நாம் நினைக்க வேண்டியுள்ளது அவ்வாறு நினைத்துக்கொண்டுதான் நாம் இதுவரை பல வியாபார வாய்ப்புகளை கை நழுவ விட்டு கொண்டு இன்னமும் படித்த இளைஞர்கள் உரிய வேலைக்கு செல்லாமல் கிடைத்த வேலையை செய்துகொண்டு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். how to get gas agency dealership in Tamil

 

 

LPG கேஸ் ஏஜென்சி நாம் எப்படி எடுப்பது அதற்கு முதலீடு பத்தாயிரம் போதுமா  என்ற எண்ணம் இதைப் படிக்கும்போது உங்களுக்கு தோன்றலாம் ஆம் நண்பர்களே, இந்த பணிக்கு வெறும் பத்தாயிரம் போதுமானதுதான் எப்படி என்று கூறுகிறேன் இந்த கேஸ் ஏஜென்சி பொதுவாக பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து நேரடியாக மக்களுக்கு சென்றடைவது கிடையாது அதற்கு பதிலாக பொதுத்துறை நிறுவனம் மொத்த டீலருக்கு இந்த கேஸ் சிலிண்டர்களை வழங்குகிறது அந்த மொத்த டீலர் ஆனவர் உதவி டீலர்களை அமைத்துக் கொள்வார் அந்த உதவி டீலர்களிடம் இருந்து நான் கூறியது போல உதவி ஏஜென்சி வழியாக மக்களுக்கு சென்றடையும் இந்த எல்பிஜி கேஸ் என்பது வீடுகளுக்கு உபயோகப்படுத்துவது தவிர கமர்சியல் எல்பிஜி கேஸ் என்பது சிறிய கடைகளுக்கு டீக்கடைகளுக்கு சிறிய ஹோட்டல்களுக்கு இவர்களுக்கெல்லாம் கமர்சியல் LPG சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் Domestic use சிலிண்டர்கள் அதாவது வீட்டிற்கு வழங்கும் மானிய சிலிண்டர்களை பயன்படுத்தக்கூடாது என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. how to get gas agency dealership in Tamil

 

 

ஆகவே நாம் செய்யவேண்டியதெல்லாம் இந்த கமர்சியல் lpg சிலிண்டர்களை மொத்த டீலர்களிடம் இருந்து பெற்று நான் முன்பே கூறியது போல ஒரு இருசக்கர வாகனம் இருந்தால் போதும் அதனைப் பயன்படுத்தி நாம் இந்த சிறிய கடைகளில் ஹோட்டல்களில் மற்றும் டீக்கடைகளில் சிலிண்டர் சப்ளை செய்வதாக ஆர்டர் எடுத்துக்கொள்ளவேண்டும் உதாரணத்திற்கு கமர்சியல் சிலிண்டர் ஒரு சிலிண்டர் கடைகளுக்கு சப்ளை செய்யும் விலையானது ரூபாய் 1400 முதல் 1800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது ஆனால் இந்த கமர்சியல் சிலிண்டர் என்பது மொத்த டீலரிடம் நாம் பெரும் போது அதன் விலை 1200 to 1350ரூபாய் வரை மொத்த டீலரிடம் நாம் பெற்றுக் கொள்ளலாம் அதனை நாம் 1500 முதல் 1900 வரை விற்பனை செய்யலாம் அவ்வாறு விற்பனை செய்யும்போது குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு வெறும் பத்து சிலிண்டர் மட்டுமே விற்பனை செய்தால் போதும் ஒரு சிலருக்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் லாபம் கிடைக்கும் ஆக மொத்தம் பத்து சிலிண்டருக்கு ரூபாய் 2000 லாபம் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் என்றால் ஒரு மாதத்தில் 4
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மீத வேலை நாட்கள் மொத்தம் 22 நாட்கள் வரும் 22 பெருக்கல் 2000 மொத்தம் 44 ஆயிரம் என நமது வருமானத்தை நாமே நிர்ணயித்துக் கொள்ளலாம். how to get gas agency dealership in Tamil

 

 

சரி இப்போது இந்த மொத்த டீலரிடம் இருந்து சிலிண்டரை எப்படி பெற வேண்டும் இதற்கு நீங்கள் உங்கள் உள்ளூரிலேயே அல்லது பக்கத்தில் இருக்கும் நகரத்தில் இதற்கான மொத்த டீலர் இருப்பார் அந்த டீலரிடம் உரிய படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அவரிடம் கொடுத்து அதற்கான டெபாசிட் தொகை சில டீலர்கள் 5000 இருக்கும் டீலர்களிடம் பத்தாயிரம் வரை இருக்கும் அதற்குமேல் இருக்காது அவர்களை அணுகி இந்த ஏஜென்சி தாங்கள் எடுத்து உரிய நேரத்தில் டெலிவரி செய்தால் நிச்சயம் உங்களுக்கு தொடர்ந்து ஆர்டர் கிடைக்கும் குறித்த நேரத்தில் டெலிவரி செய்வதன் மூலம் உங்களுடைய ஆர்டர் நாளுக்கு நாள் உயரம் அப்போது உங்களது வருமானம் பல்லாயிரம் ஆக இருந்ததுபல லட்சங்கள் கூட மாற வாய்ப்புள்ளது எனவே 24 மணி நேரமும் தொடர்ந்து அடுத்தவர்களுக்காக நாம் உழைத்து கொடுப்பதைவிட நமக்காக நாமே உழைத்து உயர்வோம் எந்த தொழில் செய்தாலும் செய்யும் தொழிலே தெய்வம் என்ற தாரக மந்திரத்தை மனதில் நிறுத்தி சுயதொழில் தொடங்கி வெற்றிகரமான விற்பனையாளராக வருவதற்கு வாழ்த்துக்கள். how to get gas agency dealership in Tamil

ராஜசேகர் BA, BL

 

தனியார் கேஸ் கம்பெனிகள் : முகவர்கள் தேவை :

சூப்பர் கேஸ்

கோ கேஸ்

 

Keywords :  கேஸ் ஏஜென்சி, கேஸ் ஏஜென்சி உரிமம் பெறுவது எப்படி, அதிக லாபம் தரும் தொழில், முதலீடு இல்லாத தொழில், பாரத் கேஸ் ஏஜென்சி, ஏஜென்சி தொழில், உஜ்வாலா சிலிண்டர், டீலர் தேவை, டீலர் தொழில், 10000 முதலீட்டில் தொழில்

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி

விளம்பரம்




5 thoughts on “ரூபாய் 10,000 முதலீட்டில் LPG கேஸ் ஏஜென்சி

  1. ஸ்ரீ ஸ்ரீ சபரி நாத்

    உங்கள் புத்தகம் அருமையாக இருக்கிறது

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *