181625juices long

சளி இருமல் தும்மல் மூக்கடைப்பு ஆஸ்துமா ஆகிய குறைபாட்டை சீர் செய்யும் அற்புதமான கசாயம்

1645

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை

  •  corona virus tamil marunthu

காயமே (உடலே) மருத்துவர் !!
காய்கறிகளே மருந்து !!!

உணவை மருந்தாக்கு !!
மருந்தை உணவாக்காதே !!!

கீரைகள்  ” நடமாடும் சித்தர்கள் “

துளசி மல்லி கஷாயம்:

தேவையான பொருட்கள்:
பச்சைத் துளசி  –  100 கிராம்
சுக்கு                     –    20 கிராம்
மிளகு.                  –   அரை ஸ்பூன்
ஏலக்காய்            –   5
தனியா(மல்லி விதை) – 20 கிராம்
பனை வெல்லம் –   தேவையான அளவு

செய்முறை:

முதலில்  துளசி , சுக்கு , மிளகு , ஏலக்காய்,  மல்லி ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு  தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும் .

பின்னர் அதனை வடிகட்டி அதனுடன் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து  அருந்தவேண்டும். சித்த மருத்துவம்

பயன்கள்:
இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சளி ,  இருமல் , தும்மல் , மூக்கடைப்பு ஆஸ்துமா  மற்றம் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு முழு ஆரோக்கியம் பெறலாம்.

இரவு படுக்கப் போகும் முன்:
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். சித்த மருத்துவம்

குறிப்பு:
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும். சித்த மருத்துவம்

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

சிறுதொழில்முனைவோர்.காம் வாசகர்களுக்காக:
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *