சிறுதொழில்கள்

பெண்களுக்கான சிறு தொழில்கள் மற்றும் இலவச பயிற்சி

8003

பெண்களுக்கான சிறுதொழில்கள்:

நமது சிறு தொழில்முனைவோர்.காம் வாசகர்கள் அனைவருமே குறைந்த முதலீட்டில் நல்ல லாபத்தை பெற கூடிய தொழில்கள் செய்கிறார்கள். 500 முதல் 20000 முதலீட்டில் ஆரம்பித்து 1000 முதல் 40000 வரை லாபம் பெற கூடிய தொழில்கள். லாபம், பணம் இவற்றை தாண்டி ஆர்வமும், விடாமுயற்சியும் தேவை என்பதே இவர்கள் அனைவரின் அறிவுரை. இங்கு தொடர்புக்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரி மற்றும் எண்களிகள் தொடர்பு கொண்டு பயன்பெறுவது தங்களின் சொந்த பொறுப்பு ஆகும்.

வேலை வாய்ப்புகள் அரிதான இக்காலத்தில் ஏரளமான சிறுதொழிகளுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை . சிறுதொழில் செய்வது என்று முடிவெடுத்துவிட்டால் ஆரம்பத்தில்  அதிக லாபம் எதிர்பார்க்க  இயலாது .லபமானது சிறிது சிறிதாக அதிகரிக்கும் .அதே போல் உங்கள் சக்திக்கு ஏற்ற ஒரு சிறுமுதலீட்டில் உங்களுக்கு  விருப்பமான தொழிலை தேர்தெடுத்துக்கொள்ளவும் .உங்கள் லபமானது  உங்கள் பொருள்களின் தரம் , உங்களின் சேவையின் நிலைப்பு தன்மை ,வடிக்கையாளர்களை  நீங்கள் நடத்தும் விதம், போன்ற வற்றால் உஙக்ளின் லாபம் அதிகரிக்கும்.

சரி உங்களக்கு உங்கள் விருப்பமான சிறுதொழில் என்னவென்று தெரியவில்லையா ..

கீழ் கொடுக்கப்பட்ட  பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் .

உணவு பொருள்  சிறுதொழில்:

1.மசாலா பொடி தயாரிப்பு
2.ஊறுகாய் தயாரிப்பு
3.பிஸ்கட்டுகள் மற்றும் பன் தயாரிப்பு
4.ஜாம் தயாரிப்பு
5.சிப்ஸ் தயாரிப்பு
6.அப்பளம் மற்றும் வத்தல்  தயாரிப்பு
7.மிட்சேர்  போன்ற  சிற்றுண்டி  தயாரிப்பு
8.சிறு உணவகம்
9.டீ  கடை
10.ஜூஸ் கடை
11.சிற்றுண்டி  விற்பனை கடை
12.இட்லி மாவு மற்றும்  தோசை  மாவு தயாரிப்பு

சிறு விற்பனை தொழில்கள்:

13.ஆடைகள்  விற்பனை (பெண்கள் ஜாக்கெட் துணி ,சேலை மற்றும் பெட்டிகோட் வீடு  வீடாக  சென்று விற்பனை    செய்யலாம் )
14. சிறு பாத்திரங்கள் விற்பனை
15.அழகு சதான  பொருள்கள் விற்பனை
16.கைக்கடிகாரம் மற்றும் பெல்ட் விற்பனை
17.வீட்டுக்கு  தேவையான பிளாஸ்டிக் பொருள்கள்  விற்பனை
18.பூ  காய்கறி மற்றும் பழ விதைகள் விற்பனை
19.பழம்  விற்பனை
20.காய்கறி விற்பனை
ஆஃபீஸ்க்ளுக்கு  எழுதுபொருள் விற்பனை

பண்ணை சிறுதொழில்கள்:

21.முயல் வளர்ப்பு
22.கோழி மற்றும் காடை  வளர்ப்பு
23. தேனீ  வளர்ப்பு
24.ஆடு வளர்ப்பு (ஆரம்பத்தில் ஒரு ஜோடி வாங்கினால்  நல்லது )

மேற்கண்ட  பண்ணை தொழிகள்  முறையான பயிற்சி  பெற்ற  பின்  செய்தால்  நல்லது

இது போன்ற பல தொழிகள்  நம்மை  சுற்றியுள்ள அவற்றில் உங்களின் விருப்பமான சிறுதொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்வது முதல் படி …

இரண்டாவது வேலை  அந்த சிறுதொழிகளுக்கான  மூலப்பொருள்கள்  கிடைக்குமிடங்களை  தெரிந்துகொள்வது .

மூன்றாவது  அந்த சிறுதொழில்களுக்கான  கருவி முதலீடுகளை குறைதல் . இப்போது நீங்க மசாலா தயாரிப்பு நிறுவனம் நடத்த போகிறீர்கள் என்றால் மசாலா அரைக்கும் கருவியை  உடனே வாங்கிவந்து விட கூடாது .ஒரு வருடமாவது கடைகளில் அரைத்து விற்பனை செய்து அதில் வரும் லாபத்தைக்கொண்டு கருவிகளை வாங்கவேண்டும் .

நான்காவது உங்கள்  தொழில் மேம்பட தினமும் ஐந்து முக்கிய  வேலைகளை  ஒவொன்றாக செய்ய  வேண்டும் .முக்கியமற்ற  வேலைகளை பின்பு நேரம் இருந்தால்  செய்யலாம் . பெண்களுக்கான சிறு தொழில்கள்

ஐந்தாவது  மனக்காட்சி படுத்துதல் உங்களால்  இத்தொழிலை சாதிக்க  முடியும் என  நம்புவது .சுருக்கமான சொல்லவேண்டுமானால் உஙக்ளின் படைப்பு திறனை முடிகிவிடுதல் .20 நிமிடம் கண்களை  கொண்டு  நீங்கள் உஙகள் தொழிலில் அதிக பட்சமாக உங்கள் சாதிக்க முடித்தால்  என்ன என்ன மாற்றங்கள் நிகழும் , உங்கள் நிறுவன கணக்கில்  ஏராளமான  பணம்,கார்  பங்களா ,வெளிநாடு சுற்றுலா  மற்றும் பண்ணை வீடு போன்றவற்றை மனக்காட்சி படுத்தவேண்டும் .

மேல உள்ள தொழில்கள் அனைத்துக்கும் விளக்கம் மற்றும் பயிற்சி பெற விரும்பினால் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு –9488565617, 7708820505
இயக்குநர்
பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம்
பிள்ளையார்பட்டி
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *