how to prepare land for organic in tamil

பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு!!

6904

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2020 | பயிர் காப்பீடு திட்டம் 2020

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் (Pradhan Mantri Fasal Bima Yojana) கீழ் காரீஃப் பருவ பயிர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன ?

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பருவம் தவறி பெய்யும் மழை மற்றும் அதிகப்படியான மழையால் ஏற்படும் பயிர் இழப்பினை இந்த திட்டம் ஈடு செய்கிறது. ஒவ்வொரு பருவத்திலும் வட்டாரத்திற்கேற்ற பயிர்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றில் சாகுபடி செய்ய உள்ள பயிர்களை விவசாயிகள் காப்பீடு செய்து இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

இதன்படி காரிஃப் பருவத்தில் சாகுபடி செய்ய உள்ள பயிர்களைக் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு தமிழக வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளம், துவரை, உளுந்து, கடலை, சோளம், கம்பு, எள், வெங்காயம் மற்றும் மஞ்சள் பயிர்களை பயிரிடும் விவசாயிகள் இந்த மாதம் 31-ந் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் விவசாயிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்

காப்பீட்டு தொகை

ஒருவர் காரீஃப் பயிர்களுக்கு 2 சதவிகித ப்ரீமியத்தையும், ராபி பயிர்களுக்கு 1.5 சதவிகித ப்ரீமியத்தையும் செலுத்த வேண்டும்.

பிரதமரின் இத்திட்டம் தோட்டகலை பயிர்கள் மற்றும் வணிக பயிர்களுக்கும் காப்பீட்டு பாதுகாப்பை வழங்குகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் 5 சதவிகித ப்ரீமியத்தை செலுத்த வேண்டும்.

பயிர் காப்பீட்டுத்தொகையில் விவசாயிகள் 2 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.626, உளுந்துக்கு ரூ.331, மணிலாவுக்கு ரூ.525, கம்புக்கு ரூ.122, எள் ரூ.156-ம் காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

காப்பீடு செய்வது எப்படி?

காரீஃப் பருவம் 2020-ம் ஆண்டில் கடன் பெறும் விவசாயிகள் விருப்பக் கடிதம் அளித்து விருப்பத்தின் பெயரில் கடன் பெறும் வங்கியில் காப்பீடு செய்துகொள்ளலாம்.

கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ முன்மொழிவு படிவம் அளித்து பயிருக்கான பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்துகொள்ளலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

நில சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தகம், புகைப்படம் ஆகியவற்றுடன் இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க் காப்பீட்டிற்கான பிரீமியம் தொகையைச் செலுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.”

ஆன்லைனில் PMFBY-க்கு விண்ணப்பிப்பது எப்படி?

PMFBY இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும் – https://pmfby.gov.in/

முகப்பு பக்கத்தில் உள்ள Farmers corner -யை கிளிக் செய்யவும்

இப்போது உங்கள் மொபைல் எண்ணுடன் உள்நுழைக, உங்களிடம் கணக்கு

இல்லையென்றால் Guest Farmer என்று கிளிக் செய்து உள்நுழைக

பெயர், முகவரி, வயது, நிலை போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும்

இறுதியாக Submit பொத்தானைக் கிளிக் செய்க.

நேரடியாக இந்த திட்டத்தில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Keywords : பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2020, பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் விண்ணப்பம், பிரதம மந்திரி விவசாய திட்டம், பிரதம மந்திரி விவசாய கடன் திட்டம், விவசாய கடன் 2021, வேளாண் காப்பீட்டு திட்டங்கள், பயிர் காப்பீடு திட்டம் 2020, வேளாண்மை துறை மானியம்

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி




One thought on “பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *