cement dealrership

குறைந்த முதலீட்டில் எளிதில் தொடங்க கூடிய சிறுதொழில்கள்

8995

சிறுதொழில்கள்:

சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாகும். குறைந்த முதலீட்டில் அதிகமான இலாபம் ஈட்டக்கூடிய வகையிலான தொழில்கள் குறித்த ஐடியாக்கள் கிடைத்தால் “ககக..போ” என்கின்ற பாணியில் கருத்துக்களைக் கச்சிதமாய்க் கவர்ந்து போக நீங்க தயாரா? இதோ ஐடியாக்களை அள்ளித் தெளிக்க நாங்க தயார். நம்முடைய வீட்டில் அல்லது வாடகைக் கட்டடத்தில் சிறிய அளவிலான உற்பத்தித் தொழில்களைத் தொடங்கலாம். மிகக் குறைந்த முதலீட்டில் உற்பத்திக்கான சாதனங்கள் அல்லது இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். இயந்திரங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உற்பத்திக்கான முதலீட்டைக் குறைத்துக் கொள்ளலாம். குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய சில வகையான உற்பத்தித் தொழில்கள் குறித்து இங்குப் பார்க்கலாம்.

சோப்பு மற்றும் சலவைப் பொருட்கள் தயாரிப்பு:

சோப்பு மற்றும் சலவைப் பொருட்கள் எப்பொழுதும் நிலையான விற்பனையையும், சந்தைக்கான தேவையையும் கொண்டவை. எனவே, சோப்பு மற்றும் சலவைப் பொருட்கள் உற்பத்தியில் தயக்கமின்றி ஈடுபடலாம். இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னால், தயாரிப்பு முறைகளைப் பற்றிக் கற்றுக் கொள்வது அவசியம். வேதிப் பொருட்களையும், மூலப் பொருட்களையும் மிகச் சரியான விகிதத்தில் கலக்கத் தெரிந்தால் மட்டுமே நாம் விரும்புகின்ற வகையில் உற்பத்திப் பொருட்களைப் பெற முடியும். வீட்டிலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி உற்பத்தியைத் தொடங்கலாம் அல்லது இதற்கெனத் தனியான ஒரு இடத்தைத் தேர்வு செய்து உற்பத்தியைத் தொடங்கலாம். தேவையான முதலீடு : சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் வரை. தேவைப்படும் பொருட்கள் : தயாரிப்புக்கான வேதிப் பொருட்கள், பாத்திரங்கள், கரண்டிகள், பிளாஷ்டிக் பைகள், எரிவாயு அல்லது மின் அடுப்பு, கையுறைகள், தராசுகள்.

பயிற்சி மற்றும் மூலப்பொருள் விவரம் பெற:

திருமதி : தேன்மொழி
KVK
குன்றக்குடி
போன் : 04577 – 264288

எண்ணைய் தயாரிப்பு:

எண்ணெய் (ஹேர் ஆயில்) தயாரிப்பதும் மிகச் சிறந்த சிறு உற்பத்தித் தொழிலாகும். குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே உற்பத்தியைத் தொடங்கலாம். அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் என்பதால் இதற்கான தேவையும் விற்பனையும் அதிகம். நாம் தயாரிக்கும் எண்ணெய் பிசுபிசுப்பற்றதாகவும் நல்ல வாசனை கொண்டதாகவும் இருக்க வேண்டும். முடி உதிர்வைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தகுந்த கூட்டுப் பொருள்களோடு எண்ணெய் தயாரிப்பது நம்முடைய விற்பனையை அதிகப்படுத்தும். தேவையான முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 வரை தேவைப்படும் பொருட்கள் : எண்ணெய், மூலிகைப் பொருட்கள், வாசனைப் பொருள், பாட்டில்கள் மற்றும் கலைவை இயந்திரம்.

பயிற்சி மற்றும் மூலப்பொருள் விவரம் பெற :

திருமதி : தேன்மொழி
KVK
குன்றக்குடி
போன் : 04577 – 264288

மெழுகுவர்த்தித் தயாரிப்பு:

மெழுகுவர்த்தித் தயாரிப்பு என்பது, பெரும்பாலானோர் ஈடுபடும் சிறு உற்பத்தித் தொழில் ஆகும். மிக வித்தியாசமான வடிவமைப்புடனும், நல்ல வாசனையுடனும் தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகளுக்கு வரவேற்பும் தேவையும் அதிகம். மிகக் குறைந்த முதலீட்டில் இத்தொழிலைத் தொடங்க முடியும். தேவையான முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 வரை தேவையான பொருட்கள் : மெழுகு, வடிவமைப்பு அச்சுகள், வாசனைப் பொருட்கள், சூடான மெழுகினைத் தாங்குவதற்கான உபகரணங்கள்

பயிற்சி மற்றும் மூலப்பொருள் விவரம் பெற :

திருமதி : தேன்மொழி
KVK
குன்றக்குடி
போன் : 04577 – 264288

தேன் தயாரிப்பு:

தேனீ வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்புப் பண்ணை மூலமாகத் தேன் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடலாம். குறைந்த முதலீட்டில் தொடங்கக் கூடிய தொழில்களுள் தேன் தயாரிப்புத் தொழிலும் ஒன்று. தேன், மருந்தாகவும், ஊட்டச்சத்து மிக்க உணவாகவும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுகிறது. பொழுதுபோக்காகத் தேனீ வளர்ப்பவர்கள் கூட அதனை வருமானத்திற்குரிய தொழிலாக மாற்றிக் கொள்ளலாம். தேவையான முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 ரூபாய் வரை. தேவைப்படும் பொருட்கள் : தேன்வளர்ப்புப் பெட்டிகள், தேன் கூடுகள், சேகரித்துப் பேக்கிங் செய்வதற்கான பொருட்கள்.

பயிற்சி மற்றும் மூலப்பொருள் விவரம் பெற :

திரு. செந்திரு குமரன்

KVK
குன்றக்குடி
போன் : 04577 – 264288

உரம் தயாரித்தல்:

வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ள நம்முடைய நாட்டில் உரத்திற்கான தேவை என்றும் குறைவதில்லை. விவசாயத்திற்குத் தேவையான உரங்களைத் தயாரிக்கும் தொழிலை முதலில் சிறிய அளவில் மேற்கொள்ளலாம். சந்தையின் போக்கினையும் தேவையையும் சரியாக அறிந்து கொண்ட பின்பு இத்தொழிலை விரிவு செய்து வெற்றிக்கொடி நாட்டலாம். தேவையான முதலீடு : சுமார் 25,000 முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை தேவையான பொருட்கள் : மூலப்பொருட்கள், வேதிப் பொருட்கள், உரம் தயாரிக்கும் இயந்திரங்கள்.

உற்பத்தித் தொழில் உற்பத்தித் தொழிலில் ஈடுபட நினைப்பது வரவேற்புக்குரிய செயல். சரியான திட்டமிடல், கடுமையான உழைப்பு, நேர்மையான வணிகம், தேவையான முதலீடு ஆகியவை இருந்தால் தொழிலில் சாதனைகளை நிகழ்த்த முடியும். உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னால் பல்வேறு வகையான விசயங்கள் குறித்துத் தீர ஆராய்ந்து கொள்ளவேண்டும்.

பயிற்சி மற்றும் மூலப்பொருள் விவரம் பெற :

திரு. செந்திரு குமரன்

KVK
குன்றக்குடி
போன் : 04577 – 264288

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *