வீட்டுத் தோட்டத்தின் நன்மைகள்

தற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தை ஈடு செய்ய மக்கள் மாடி வீட்டு தோட்டத்தை அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் சீமை சுரைக்காய், தக்காளி, கீரை போன்ற செடி வகைகளை மிக எளிய முறையில் வளர்க்கலாம். அடுக்கு மாடி வீட்டில் வசிப்பவர்கள் கொள்கலனில் மூலிகை மற்றும் காய்கறிகளை நன்கு வளர்க்க மூடியும்.

மேலும் வீட்டு தோட்டத்தில் பட்டாணி, வெள்ளரி, அவுரி நெல்லி, போன்ற பயிர்களை மிக எளிதாக அதிக மகசூல் பெற முடியும். இதனால் பல நன்மைகள் வீட்டிற்கும் உலகிற்கும் ஏற்படும். காய்கறி தோட்டம் அமைப்பது ஒரு கற்றல் செயல் முறையாகும்.  மாடி பகுதியில் பயிரிட வேண்டியவை:

  1. பால்கனியில் நிழல் அதிகமாக இருந்தால் சாலட் கீரைகள், அவுரி நெல்லியினை வளர்கலாம்.
  2. சிறிய காலிப் பகுதிகள் வீட்டின் முன் இருந்தால் மூலிகை செடிகள் வளர்த்தால் மிக நன்றாக இருக்கும்.
  3. நல்ல தரமான மண் தோட்டத்தில் இருந்தால் காய்கறிகள், பூச்செடிகளை வளர்க்கலாம். மண்ணை வளப்படுத்த இயற்கை உரங்களை பயன்படுத்தலாம்.
  4. தோட்டத்தில் ஒரு முறை விதைகளை விதைத்த உடன் அது வளர்ந்து வரும்போது வாரம் ஒரு முறையாவது களை எடுக்க வேண்டும். வெப்பமான காலங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது தண்ணீர் விட வேண்டும்.
  5. பயிரிடப்பட்ட தாவரம் நன்றாக வளர்ந்த பிறகு பாக்டீரியா மற்றும் நூண்ணுயிரிகளை அழிக்க டாக்சோபிளாஸ்மா என்ற பூச்சிக் கொல்லியினை பயன்படுத்தலாம்.
  6. நீங்கள் தக்காளி, கேரட், கீரை போன்ற தாவரங்களை வளர்க்க வெறும் 6 அடி முதல் 8 அடி வரை தோட்டத்தில் காலி இடம் இருந்தால் போதும். இவ்வாறு வீட்டு தோட்டத்திலே காய்கறிகளை வளர்ப்பதால் சுத்தமான காற்று நமக்கு கிடைப்பதுடன், சுகாதாரமான இயற்கை காய்கறிகளும் கிடைக்கிறது.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *