தொழில்முனைவோர்களுக்கு தேவையான தலைமைப் பண்புகள்

தொழில்முனைவோர் இதை “9C`s for an Entrepreneur” சொல்லுவார்கள். இப்ப ஒவ்வொரு “C” யும் நமக்கு என்ன சொல்லுதுனு பார்போம்.

1. Curiosity (ஆர்வம்)

எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் . ஆர்வம் என்ற ஒரு பண்பு தொழில்முனைவோருக்கு(Entrepreneurs) தேவையான ஒன்றாகும் . தொடர்ச்சியான கற்றல், செயல்களை செய்தல் போன்ற பலவற்றிக்கு ஆர்வம் என்ற பண்பு தேவை.

2. Creativity (புதுமை)

புதுமையாக செய்வதில் நாட்டம் ,மாறுபட்டு சிந்திக்கும் திறன் ஒரு தொழிமுனைவோருக்கு(Entrepreneurs) தேவையான தலைமை பண்பாகும் (Leadership Qualities).

3. Communication (தொடர்பு)

பேச்சு, எழுத்து ,சைகை போன்றைவை பிறரை தொடர்புகொள்ளும் வழியாகும். அவை சரியானதாகவும், தெளிவானவானதாகவும் அமைய வேண்டும். பிறரை நமக்கு சாதகமாக இணங்கவைக்கும் ஆற்றல் கவனிக்கவைக்கும் ஆற்றல் போன்றவை தொழில்முனைவோருக்கு (Entrepreneurs) தேவையான பண்பாகும்.

4. Character (நற்குணம்)

நற்பண்பு, நன்னடத்தை, ஒழுக்கம் போன்ற பண்புகள் தொழில்முனைவோருக்கு (Entrepreneurs) மிகவும் அவசியம். 5. Courage (துணிவு) நாம் எந்த செயலை செய்து முடிக்கவும் தைரியம் மிகமுக்கியமானது. இடையில் ஏதாவது தடைகள் ஏற்பட்டாலும் எடுத்துக்கொண்ட செயலை செய்து முடிக்க துணிவு அவசியமாகிறது . இதுபோன்ற பலவற்றை நிறைவேற்ற தைரியம் என்ற பண்பு தேவைப்படுகிறது.

6. Conviction (நம்பிக்கையும்,பிடிமானமும் வைத்திருப்பது)

நமது குறிக்கோள்கள்,செயல்கள் போன்ற பலவற்றிலும் நம்பிக்கையும், பிடிமானமும் வைத்திருப்பது.

7. Charisma (வசீகரித்தல்)

பிறரை வசீகரிக்கும் ஆற்றல் வசீகரிக்கும் ஆற்றல் என்பது முக அழகை சார்ந்ததல்ல.அது நமது பேச்சின் மூலமாகவும் இருக்கலாம் , நடவடிக்கைகளின் மூலமாகவும் இருக்கலாம், நற்குணங்களின் மூலமாகவும் இருக்கலாம்.

8. Competence (ஆற்றல்,திறமை)

நிர்வாக ஆற்றல்,செயல் ஆற்றல் ,பேச்சு ஆற்றல் போன்ற பல ஆற்றல்கள் தொழில்முனைவோருக்குத் தேவைப்படுகின்றன.

9. Common Sense (இயல்பறிவு)

பொது புத்தி, புத்திசாலித்தனம் ,இயல்பறிவு ,அறிவுக் கூர்மை போன்றவை தொழில்முனைவோருக்கு அவசியம்.

தொழில்முனைவோர்கள்(Entrepreneurs) இப்படிப்பட்ட தலைமைப் பண்புகளை (Leadership Characteristics) வளர்த்துகொள்ள வேண்டும். இந்த தலைமைப் பண்புகளை (Leadership Characteristics) கொண்ட தொழில்முனைவோர்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவார்கள். தொழில்முனைவோர்

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
 
தங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற தொடர்புக்கு இங்கு க்ளிக் செய்யவும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *