முதலீடு ரூபாய் 500 ல், 5 சுய தொழில்

கீரை:
இன்று மருத்துவரிடம் சென்றால், முடிவில் அவர் சொல்லும் அறிவுரை தினமும் கீரை சாப்பிடுங்கள் என்பதுதான்.

கருங்கால் கோழி குஞ்சு வாங்க : 9677101100

உங்கள் தெருவில் உள்ள வீடுகளுக்கு மட்டும் தினம் ஒரு வகை கீரை டெலிவரீ செய்யலாம். முதலில் அனைத்து வகையான கீரைகளின் நன்மைகளை துண்டு விளம்பரம்  மூலம் தெரிவித்து, விழிப்பு உணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் ஆர்டர் எடுக்க முடியும். தினமும் காலை 7 மணிகுக்குள் அனைத்து வீட்டுக்கும் டெலிவரீ செய்து முடித்து விட வேண்டும், வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ பணம் வசூல் செய்து கொள்ளலாம். மேலும் கீரை கட்டு ரூபாய் 3 முதல் ரூபாய் 5 க்குள்  கொள்முதல் செய்ய முடியும். ரூபாய் 10 வரை விற்பனை செய்ய முடியும். 50 வீடுகளுக்கு தினம் விற்பனை செய்தால் கூட மாதம் ரூபாய் 7500 வருமானம் பெற முடியும். அதுவும் காலை 2 மணி நேரத்தில்.

SNACKS BOX:

இன்று பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக SNACKS BOX  கொடுத்து விடப்படுகிறது. மேலும் இதை பள்ளிகளும் அறிவுறுதிக்கிறது. இப்பொழுது வரை, பிஸ்கட் மற்றும் முறுக்கு போன்ற பொருட்கள் அதிகம் கொடுத்து அனுப்ப படுகிறது.

நீங்கள் செய்ய வேண்டியது, ப்ரூட் சாலட், உலர் பழ சாலட், உலர் பருப்பு சாலட் போன்றவைகளை தரமாக, சுவையாக தயார் செய்து, கண்கவரும் வகையில் பேக்கிங் செய்து, உங்கள் தெருவில் பள்ளி செல்லும் குழந்தைகளின் வீட்டுக்கு மட்டும் விற்பனை செய்யலாம். மிக சிறிய முதலீட்டில் தொழில் தொடங்கலாம், நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் காக்கும் பொருள் என்பதால், விற்பனை வாய்ப்பும் அதிகம் .

SMS விளம்பரம்:

இன்று விளம்பரம் இல்லாமல், வியாபாரம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

உங்கள் பகுதியில் தொடங்கப்படும் சிறு, பெரு நிறுவங்களை தொடர்பு கொண்டு நீங்கள்  SMS விளம்பரம் செய்ய ஆர்டர் பெறலாம். அதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பகுதியில் உள்ளவர்களின் போன் எங்களை வயது வரியாக, துறை வரியாக, பால் இனம் வரியாக பிரித்து வைத்து கொள்ள வேண்டும். தகுந்த நபர்களுக்கு மட்டுமே விளம்பரம் அனுப்ப வேண்டும். உதாரணம்: பெண்கள் அழகு நிறுவ துவக்க விழாவிற்கு பெண்களுக்குத்தான் அதிக SMS அனுப்ப வேண்டும்.

உங்களிடம் இருக்கும் DATA மிகவும் துல்லியமாகவும், தரமாகவும் இருந்தால் தொடர்ந்து ஆர்டர் கிடைக்கும். மேலும் Bulk SMS வாங்கும் செலவு மிக குறைவு, மிக சிறிய முதலீட்டில் தொழில் தொடங்கலாம், நல்ல லாபம் கிடைக்கும்.

அம்மியில் அரைத்த மிளகாய் PASTE:

பண்டைய காலம் தொட்டு மிளகாய் அரைத்து குழம்பு வைப்பது என்பது, அனைவராலும் விரும்பும் ஓர் சுவை ஆகும். ஆனால் இன்று நாகரிகம் மற்றும் நகர வளர்ச்சி என்று இந்த விசயமே மறந்து போகும் அளவில் உள்ளது. ஆனால், இன்றும் இதை விரும்புவர் நிறைய உள்ளனர்.

அதுவும் அரைத்த மிளகாய் மீன் குழம்பு வைத்து சாப்பிடுதல் என்பது தனி சுவை. ஆனால் இதை செய்ய இந்த அவசர உலகில் நேரம் இல்லை. எனவே இதை ஓர் தொழிலாக செய்யலாம். மிளகாய் அரைத்து மீன் மார்க்கெட் அருகில் வைத்துதோ அல்லது கடைகளில் கொடுததோ விற்பனை செய்து பணம் பார்க்கலாம். என்ணேனில், சந்தையில் இது போல் இல்லை, மேலும் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. மிக சிறிய முதலீட்டில் தொழில் தொடங்கலாம், நல்ல லாபம் கிடைக்கும்.

ந்யூஸ்  Agency:

உங்கள் பகுதில் நிகழும் முக்கிய நிகழ்வுகளை செய்தியாக வடிவம் அமைத்து புகை படத்துடன், பெரிய ஊடகங்களுக்கு விற்பனை செய்ய முடியும். அதேபோல் உங்கள் பகுதியில் உள்ள நல்ல விசயங்கள், கோவில் கதைகள், தனி நபர் சாதனை போன்றவைகளை பேட்டி எடுத்தும், ஊடகங்களுக்கு விற்பனை செய்ய முடியும்.

இன்று ஊடகங்களும் பகுதிக்கு ஒரு ஆள் நியமனம் செய்வது அதிக செலவு என்பால், இந்த முறையில் செய்திகளை பெற்று கொள்ள விரும்பிக்கின்றார். இந்த முறைக்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் உங்களுக்கு தேவைப்படும் புகை பட கருவிகள் உங்கள் பகுதியிலே வாடகைக்கு கிடைக்கும், சிறிய முதலீட்டில் பகுதி நேரமாகவே செய்தலே நல்ல வருமானம் பெறலாம்.

மேலே சொல்லப்பட்ட அனைத்தும் தொழில்கள் எல்லாரலும் செய்ய கூடியவை ஆகும்.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




One thought on “முதலீடு ரூபாய் 500 ல், 5 சுய தொழில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *