குறைந்த முதலீட்டில் எளிய சிறு தொழில்கள்

இன்று சந்தையில் அதிக தேவை உள்ள, குறைந்த முதலீடு கொண்டு, இருப்பாலரும் செய்ய கூடிய சில சிறு தொழில்கள் களை இங்கு பதிவு செய்து உள்ளோம். மேலும் சிறுதொழில்முனைவோர்.காம் வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு பயிற்சி விவரம், மூலப் பொருள் கிடைக்கும் இடம் போன்ற விவரங்களும் இங்கு பதிவு செய்து உள்ளோம். தகுந்த எச்சரிக்கை உடன் செயல்படவும்.

மூலிகை பொருள்கள்:
இன்று ஆரோகியத்தில் ஏற்பட்ட விழிப்புரணர்வு காரணமாக மூலிகை சார்ந்த உணவு பொருள்களுக்கு அதிக தேவை உள்ளது.
அதன் அடிப்படையில் மூலிகை டீ, மூலிகை சூப் ரெடிமிக்ஸ் கலவைகளுக்கு அதிக தேவை உள்ளது. மேலும் ஏற்றுமதி வாய்ப்பும் உள்ள தொழில் ஆகும். சிறு தொழில்கள்.

சிறுதானிய உணவு பொருள்கள்:
சிறுதானியயங்களை பயன்படுத்தி செய்யப்படும் பிஸ்கட், சேவு, முறுக்கு மற்றும் இதர பொருள்களும் அதிக தேவை உள்ளது.


விளம்பரம் : அனைத்து வகையான அறியவகை மூலிகை செடிகள் மற்றும் பாரம்பரிய மரங்கள் கிடைக்கும்: 7299549068
கை மற்றும் வீடு சுத்தம் செய்யும் க்ளீனர்கள் வியாபாரம்:
பினாயில், ஹேண்ட் வாஷ், புளோர் க்ளீனர், டாய்லட் க்ளீனர் மற்றும் சோப் ஆயில் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம். இதில் புதுமைகளை புகுத்தினால் வெற்றி மேல் வெற்றிதான்.
மூலிகை குளியல் பொடி வியாபாரம்:
கற்றாழை, நெல்லி முல்லை, ஆவாரம் பூ, செம்பருத்தி, துளசி, கோரக்கிழங்கு உள்ளிட்ட 16 வகையான பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் பேஸ் வாஷ் மற்றும் குளியல் பொடி தயாரித்து விற்பனை  செய்யலாம்.
சணல் பை தயாரிப்பு வியாபாரம்: சிறு தொழில்கள்
பர்ஸ், கை பை, சுற்றுலா பை, உணவு பை, தாம்பூல பை, மளிகை சரக்கு வாங்கும் பிக் ஷாப்பர் பை என பல வகையான பைகளை தயாரிக்கலாம் அதோடு கூட மொபைல் பவுச், டேபிள் மேட், தோரணம்  ஆகியவற்றையும் சணல் மூலம் தயாரிக்கலாம்.
தேனீ வளர்ப்பு:
“வீட்டிற்கு ஒரு தேனீ பெட்டி, குடும்பத்திற்கு ஆயுள் கெட்டி”ங்கிற அடிப்படையோட திருமதி ஜோஸ்பின் அவர்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள்ல, தேனீ வளர்ப்பு குறித்த இலவச பயிற்சியை வழங்குறாங்க. தொடர்புக்கு…மதுரை கடச்சனேந்தல் விபிஸ் இயற்கை பண்ணை : 98655 55047
மாடி தோட்டம்:
இன்று மாடி தோட்டம் அமைக்க அனைத்து தரப்பு மக்களும் ஆர்வம் கொண்டு உள்ளனர். இதற்கு தேவையான மூலப்பொருள்கள் அனைத்து இடங்களிலும் குறைந்த விலையில் கிடைக்கும்.
இங்கு குறிப்பிட்ட அனைத்து தொழில்க்ளுக்கும் மதுரை ஹோம் சைன்ஸ் கல்லூரியில் பயிற்சி
நடைபெறும் தொடர்புக்கு: 0452 242 2684
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
 

சேவை சிறு தொழில்கள்:

ஆள் பலம் இருந்தால், பழைய வீட்டில் இருந்து, புது வீட்டுக்கு பொருள் முழுவதும் கொண்டு சேர்த்து, வீட்டை அலங்கரிக்கும், ‘ஹவுஸ் ஷிப்டிங்’ சேவை துவங்கலாம்.

பேச்சு திறன் உள்ளவர்கள் எனில், தாம்பூலப்பை, தேங்காய், பழம் மலிவு விலையில் எங்கு கிடைக்கும் என்பதை அறிந்து, திருமண மண்டபத்தை அணுகி, யார் வீட்டு திருமணத்துக்கு தேவையோ அவர்களுக்கு கைமாற்றிவிட்டு பணம் பண்ணலாம். கேட்டரிங் செய்பவர்கள் கூட கமிஷன் முறையில் வாங்கிக் கொள்வர்.

பழமையான கோவில், புண்ணிய தலங்களை அறிந்து, ‘டூர்’ ஏற்பாடு செய்யலாம். சுற்றுலா தலங்கள் உள்ள இடத்தில் வசிப்பவராக இருந்தால், அதன் வரலாற்றை அறிந்து, கைடாக பணிபுரியலாம்.

வீட்டில் பேப்பர் வாங்குபவர்களாக இருந்தால், அதில், ‘லாண்டரி பேக்’ தயாரித்து, அயர்ன் நிலையம், ஓட்டல்களுக்கு வினியோகிக்கலாம்.

வீட்டில் இடம் இருந்தால் கோதுமை புல் வளர்த்து, நடைபயிற்சி நடைபெறுகிற சாலையோரம், பூங்காக்களில் கோதுமை புல் ஜூஸ் விற்பனை செய்யலாம்; கோதுமை புல்லை உலர வைத்து, பவுடராக்கியும் விற்கலாம்.

விளம்பரம் : கீ ஜெராக்ஸ் மிஷின் விறபனைக்கு : 8883765519
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *