நல்ல வருமானம் தரக்கூடிய சிறுதொழில்

புடவை வியாபாரம் 
நம் நாட்டிலும் ஏன் நம்மிடையேயும் பரவலாக இயங்கிவரும் ஒரு தொழில் புடவை வியாபாரம். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்து பெண்களிடம் என ஆரம்பிக்கும் இந்த வியாபாரம் நாளடைவில் சூடுபிடித்து மற்றவர்களையும் அணுகக்கூடியது. அடுத்தக்கட்டமாக நம் குழந்தைகள் படிக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் புடவைகளை விநியோகம் செய்வதன் மூலமாக வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்.

முதலீடு ஐந்தாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரைத் தேவைப்படும். சில மொத்த வியாபாரிகளிடமிருந்து புடவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இதில் விற்றது போக அந்தந்த மாதம் மீதம் உள்ள புடவைகளை திரும்பக் கொடுத்துவிட்டு புதுப்புது டிசைன்களில் மேலும் பல புடவைகளை வாங்கி வந்து விற்கலாம்.

வீட்டில் உள்ள மற்றவர்கள் காலையில் வேலைக்கும் பள்ளிக்கும் சென்ற பிறகு வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய ஓர் அற்புதமான தொழில் இந்த புடவை வியாபாரம். காலத்திற்கேற்றாற்போல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்தால், புடவைகளை வாங்கி வைக்க வேண்டியதில்லை. பணம் குறித்து பேரம் பேச வேண்டியதில்லை. சிரமமின்றி நல்ல வருமானம் பார்க்கலாம்.

சேலைகள் மொத்தமாக வாங்க : +91 9788720679 , 8838184795

மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கிறேன்!
திருமதி சரஸ்வதி, எம்.ஆர்.சி.நகர், சென்னை.

‘‘வீட்டில் இருந்தபடியே ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என யோசித்தபோது புடவைகளை வாங்கி விற்பனை செய்யலாம் எனத் தோன்றியது. தொழில் செய்வதற்கு முயன்று இடையில் ஒருசில காரணங்களால் நின்றுவிட்டது. அப்படி இருக்கையில் ஒருநாள் ஃபேஸ்புக்கில் நல்ல டிசைனில் ஒரு புடவையைப் பார்த்து ஆர்டர் செய்தேன். அந்தப் புடவை வந்து சேர்வதற்கு காலதாமதமானது.

விசாரித்தபோது அவர்கள் இன்னும் அனுப்பவில்லையா உடனடியாக அனுப்பச் சொல்கிறேன் என்றனர். அப்போதுதான் புரிந்தது, இவர்கள் அனுப்பவில்லை… இவர்கள் ஆர்டர் எடுத்து வேறு யாரோ அனுப்புகிறார்கள் என தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது எனது தோழி ஒருத்தி  இதுபோன்று ஆன்லைனில் புடவை வியாபாரம் செய்வது தெரியவந்தது.

அவரிடம் விவரங்களைக் கேட்டு தெரிந்துகொண்டு நானும் ஆன்லைனில் புடவை வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில்தான் இந்தத் தொழிலை செய்து வருகிறேன். வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளவர்களுக்கு புடவையோட போட்டோக்கள்
அனுப்புவேன்.

அதனைப் பார்த்துவிட்டு ஆன்லைனில் வாங்குவது எப்படி இருக்குமோ என முதலில் தயங்கியவர்கள்கூட பின்னர் ஒவ்வொருத்தராக ஆர்டர் தந்தார்கள். எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களை எனது வாட்ஸ்அப் குரூப்பில் சேர்த்திருந்ததால் பொருள் வந்ததும் பணம் தருகிறேன் என்றார்கள், அதனால் புடவை வந்ததும் எங்கள் வீட்டுக்கே வந்து வாங்கிக்கொண்டு பணம் கொடுத்தார்கள்.

தரம் மற்றும் விலையில் அவர்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அவர்கள் அவர்களது நண்பர்கள் மற்றும் நண்பர்களுக்கு நண்பர்கள் என வெளியூர்களில் இருக்கும் உறவினர்கள் மற்றும்  தாய்லாந்து, சிங்கப்பூர் என வெளிநாடுவரை தற்போது எனது தொழில் விரிவடைந்துள்ளது. முழு கவனம் செலுத்தி உழைப்பதால் ஒரு மாதத்திற்கு சராசரியாக ரூ.20 ஆயிரம் தொடங்கி 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்.

அடுத்து சமையலறை அலங்காரப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள் என தொழிலை விரிவுபடுத்தி வருமானத்தைப் பெருக்க திட்டமிட்டுள்ளேன்.  இந்தத் தொழிலுக்கு முதலீடு என்பது ஒரு ஸ்மார்ட்போன், எப்போதும் இயங்கக்கூடிய வகையில் இன்டர்நெட் கனெக் ஷன் மற்றும் ஒரு டைரி போதும்.’’

மசாலா பொடி
இன்றைய காலகட்டத்தில் நம் சமையல் அறையை அதிகமாக ஆக்கிரமித்திருப்பது மசாலா பொடி வகைகள்தான்.  சாம்பார் பொடி, ரசப்பொடி, மிளகாய்ப்பொடி என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். அத்தகைய பொடி வகைகளை நாம் வீட்டிலிருந்தபடியே தரமான முறையில் குறைந்த முதலீட்டில் தயாரிக்கலாம். நம் வீட்டு சமையல் அறை, மளிகைப் பொருட்கள் மற்றும் மிக்ஸி ஆகியவைதான் இதற்கு முதலீடு.

தரமான மசாலா மங்கையர் மசாலா வாங்கி விற்க : 8489422333

முதலில் நாம் தயாரிக்கும் மசாலா பொடிகளை நம் உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுக்கலாம். அடுத்தக் கட்டமாக அக்கம்பக்கம் உள்ள மளிகைக்கடைகளில் சிறுசிறு பாக்கெட்டுகளாக பேக் (100 கிராம், 200 கிராம் அளவுகளில்) செய்து விநியோகிக்கலாம். அதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சூப்பர் மார்க்கெட்டுகளை அணுகி விற்பனையை விரிவுபடுத்தலாம். அதேபோன்று, ஐ.டி. கம்பெனி உள்ளிட்ட கார்ப்பரேட்  அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு மாதம் ஒருமுறை நேரில் சென்று விற்கலாம். தரமானதாக தயாரித்தால் தொடர்ந்து ஆர்டர் உங்களைத் தேடி வரும்.

மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கிறேன்!
திருமதி அல்லி தவத்துரைநாதன், சூளைமேடு, சென்னை.  

‘‘எனது அம்மா வீட்டில் மசாலா தயாரித்து அக்கம்பக்கம் வீடுகள் மற்றும் உறவினர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் தயார் செய்யும் மசாலாக்களை எனது அலுவலக நண்பர்களுக்கு கொண்டு கொடுப்பேன். அதன் தரம் நன்றாக இருக்கிறது என்று அவர்கள் எங்களது மசாலாவுக்கு நிரந்தர வாடிக்கையாளர் ஆனார்கள். இந்தநிலையில், விருப்ப ஓய்வுபெற்றபோது சுறுசுறுப்பாக இருந்த நான் வீட்டில் இருந்து என்ன செய்யப்போகிறோம் என கலங்கிக் கொண்டிருந்தேன்.

ஏதாவது செய்ய வேண்டும், அப்போதுதான் உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும் என பேசிக் கொண்டிருந்தபோது, மசாலா தயாரிக்கும் தொழிலை நீ ஏன் செய்யக்கூடாது என எனது அம்மா ஊக்கம் கொடுத்தார். அன்றிலிருந்து மசாலாப் பொடி தயாரித்து அக்கம்பக்கம் மற்றும் கடைகளுக்குக் கொடுத்து வருகிறேன்.

சுறுசுறுப்பாகவும், மனதுக்கு நிம்மதியாகவும் இருக்கிறது. வீட்டில் இருந்தபடியே ஒரு தொழிலை செய்வதால் அதற்கேற்ற வருமானமும் கிடைக்கிறது. மாதம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. தொழிலை இன்னும் விரிவுபடுத்த வேண்டும். 4 பேருக்கு தொழில் வாய்ப்பையும் வழங்க வேண்டும் என்பதே எனது ஆசை.’’

காகிதப்பை
இன்றைக்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது கேரி பேக் என்னும் பிளாஸ்டிக் பைகள். இவை மண்ணில் மக்கிப் போகாமல் மனிதர்களுக்கு கேடு விளைவிப்பதால் மக்கிக் போகக்கூடிய காகிதப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு அதற்கு வரவேற்பும் அதிகரித்து வருகிறது. இந்தத் தொழிலுக்கு முதலீடு என்று பார்த்தால் படித்துமுடிக்கப்பட்ட செய்தித்தாள்கள், காகிதத்தை ஒட்டுவதற்கு பசை, காகிதம் வெட்ட ஒரு கத்தரிக்கோல் மற்றும் ஒரு சிறிய அறை.

தனியாகவோ அல்லது இரண்டு மூன்று பேர் சேர்ந்தோ இந்தக் காகிதப்பை தயாரிப்பில் ஈடுபடலாம். மாத இறுதியில் சேரும் நாளிதழ்களை (Daily News Paper) சேகரித்து எளிய முறையில் வீட்டிலிருந்தபடியே காகிதப்பை (Paper Bag) தயாரிக்கலாம். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தினமும் 4 அல்லது 5 மணி நேரம் இதற்கென ஒதுக்கினால் போதும். தயாரித்த காகிதப்பைகளை அருகிலுள்ள மருந்தகம், காய்கறி கடை என்று அனைத்துக் கடைகளுக்கும் விநியோகம் செய்யலாம். பெரிய அளவில் தொழில்நுட்பம் தேவைப்படாத தொழில் இது.

பொழுதுபோவதோடு வருமானமும் வருகிறது!
திருமதி உஷா கிருஷ்ணன், நங்கநல்லூர், சென்னை.

‘‘வீட்டில் சும்மா இருப்பதற்குப் பதிலாக ஏதாவது செய்யலாமே என நேரம் போக்கவும், அதேநேரத்தில் நாலுபேர் சேர்ந்து பேசிக்கொண்டே ஏதாவது தொழில் செய்தால் நன்றாக இருக்குமே என நினைத்து பொழுதுபோக்காக ஆரம்பித்ததுதான் இந்த காகிதப்பை தயாரிப்புத் தொழில். பொதுவாக அனைத்து மெடிக்கல் ஷாப்புகளிலும் மருந்து வாங்கும்போது பேப்பர் பேக்கில் தான் மருந்துகளைத் தருவார்கள். சிறுதொழில்

அப்போது ஒரு கடைக்காரரிடம் நானும் இதேமாதிரி காகிதப்பை செய்து தரலாமா எனக் கேட்டேன். அவர் சரி என்று சொன்னதையடுத்து செய்து கொடுத்தேன். தொடர்ந்து வாங்க ஆரம்பித்த அவர் மூலம் அக்கம்பக்கத்து கடைகள் என செய்து கொடுத்து இன்று அது ஒரு தொழிலாக மாறிவிட்டது. தற்போது என்னிடம் 4 பேர் வேலை செய்கிறார்கள். சிறுதொழில்

வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கும் இந்தத் தொழில் வாய்ப்பைக் கொடு்ப்பதால் அவர் கூடுதலாக வருமானத்திற்காக 1 மணிநேரம் காகிதப்பை தயாரித்து சம்பாதிக்கிறார். சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒருவர் 200 முதல் 300 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். நமக்கும் பொழுதுபோவதோடு வருமானமும், நாலுபேருக்கு வேலையும் கொடுப்பதால் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.’’

பிசினஸ் ரகசியங்கள்

1. சந்தைப்படுத்துதலை நாம் சரிவர புரிந்து கொள்ளுதல் அவசியம்.
2. குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்து ஒப்படைக்க வேண்டும்.
3. தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4. மற்றவர்களின் தேவைதான் நம் ‘மையக் கரு’. அதைத் தீர்ப்பதுதான் நம் லாபத்திற்கான சூட்சுமம்.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *