பல வகை சர்பத் பலே வருமானம், இலாபம் தினமும் 1000

மிக குறைந்த முதலீடு கொண்டு இந்த வெயில் காலத்தில் நல்ல இலாபம் பார்க்க கூடிய தொழில் சர்பத் விற்பனை செய்வது ஆகும். ஓர் மரத்து அடியில் சின்ன டேபிள், ஐஸ் பாக்ஸ் இருந்தாலே இந்த தொழிலை ஆரம்பித்து விடலாம். ஆனால் ஒரே மாதிரி சர்பத் தயாரிகாமல் பல்வேறு முறைகளில் புதிய சுவைகளில் சர்பத் தயாரித்து விற்பனை செய்தால் நல்ல இலாபம் கிடைக்கும். ஆகவே பல்வேறு சர்பத் தயாரிப்பு முறைகளை இங்கு காண்போம்.

சோற்று கற்றாழைசர்பத்:

மிக எளிதாக சோற்று கற்றாழை கிடைக்கும் . இத்தனை 50 கிராம் அளவு எடுத்து கொண்டு மிக்ஸ்யில் கூழ் மாதிரி நன்கு அடித்து கொண்டு, இதில் தேவையான அளவு நன்னரி சர்பத், ஐஸ், எலும்பிச்சை சாறு கலந்து கொடுக்கலாம்.

சோற்று கற்றாழை நன்மைகள்:

  • கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்
  • செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும்.
  •  உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
  • கற்றாழை சர்பத் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க உதவும்.

தர்பூசணி சர்பத்:

தர்பூசணி  50 கிராம் அளவு எடுத்து கொண்டு மிக்ஸ்யில் கூழ் மாதிரி நன்கு அடித்து கொண்டு, இதில் தேவையான அளவு நன்னரி சர்பத், ஐஸ், எலும்பிச்சை சாறு கலந்து கொடுக்கலாம்.

தர்பூசணி நன்மைகள்:

  • உடலின் வெப்பநிலையையும், இரத்த அழுத்தத்தையும் சரிசெய்கிறது.
  • இதிலுள்ள ஃபைட்டோ – நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.
  • எடையை குறைக்க நினைப்பவர்கள் தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிக்கலாம்.
  • ஆண்மை குறைபபடுக்கு மிக சிறந்தது.

புதினா நன்னாரி சர்பத்:

தேவையானவை: நன்னாரி சர்பத் – கால் கப், சர்க்கரை – 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு – அரை டீஸ்பூன், புதினா இலை – 10.

செய்முறை: மேலே குறிப்பிட்ட அனைத்தையும் 1 கப் தண்ணீரில் சேர்த்துக் கலக்கவும். புதினா இலையை ஆய்ந்து கழுவி, பொடியாக நறுக்கி, சர்பத்தின் மேலே தூவி பறிமாறவும். புதினா மணத்துடன் புத்துணர்ச்சி தரும் இந்த நன்னாரி சர்பத். தேவை யென்றால் ஐஸ்கியூப்கள் சேர்க்கலாம்.

புதினா மருத்துவ பயன்கள்:

  • ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.
  • வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.

வெஜிடபிள் மோர்:

தேவையானவை: வெள்ளரிக்காய் – 1, சிறிது கெட்டி மோர் – 1 டம்ளர், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லித்தழை – 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகள் – 1 டீஸ்பூன், துருவிய இஞ்சி – கால் டீஸ்பூன்.

செய்முறை: வெள்ளரிக்காயின் தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். பிறகு, மோரில் உப்பு, நறுக்கிய மல்லித்தழை, துருவிய இஞ்சி, அரைத்த வெள்ளரி சேர்த்து கலந்து பறிமாறவும். இது உடலுக்கு குளிர்ச்சி தரும். இப்போது வெள்ளரி சீஸன் என்பதால், அடிக்கடி இதனை செய்து, வீட்டில் அனைவரும் பருகலாம்.

லஸ்ஸி:

  • நான்கு கப் கெட்டித் தயிரில் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு,மற்றும் எட்டு தேக்கரண்டி சீனி போடவும்.
  • இதனை மிக்சியிலிட்டு ஐஸ் கட்டிகளும் போட்டு நுரை வரும் வரை அடிக்கவும்.
  • இதனை உடனே குடிக்க வேண்டும்.

நன்னாரி வேரின் பயன்கள்:

  • உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு மற்றும் தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படுகிறது.
  • உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்தாகும்.

தங்கள் செய்யும் தொழில் அல்லது பொருளின் நன்மைகள் தெரிந்தால்தான், நாம் பொருளை வாங்குவோர் மத்தியில் நம்பிக்கையைே ஏற்படுத்தி நன்கு விற்பனை செய்ய முடியும். எனவே சர்பத் வகைகளின் நன்மைகள் இங்கு குறிப்பிடபட்டு உள்ளது.

மேலும், இங்கு குறிப்பிட தொழில்களை தொடங்க ரூபாய் 1000 இருந்தாலே போதும். விலை ரூபாய் 20 க்கு, தினமும் 50 சர்பத் விற்பனை செய்தலே தினமும் இலாபம் ரூபாய் 500 கிடைக்கும் என்பதில் மாற்றம் இல்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *