ஆண்கள் உடலுறவில் மட்டும்தான் காம உச்சத்தை அடைய முடியுமா?

ஆண், பெண் இருவரும் ஈர்ப்புடைய எதிரெதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் ஒருவருக்கொருவர் சார்ந்து தான் இருக்க வேண்டும். அப்போது தான் இல்லறம் இனிக்கும்.

இல்லற இன்பத்தைப் பொருத்தவரை, ஒருவருக்கொருவர் ஒத்த மனதுடன், தன் துணையின் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். இதில் ஆண், பெண் வித்தியாசம் கிடையாது.

உடலுறவு குறிப்பாக, உடலுறவு என்பது வெறும் உடலின்இயக்கம் மட்டுமல்ல. இதற்கு முழுக்க முழுக்க மனமும் இணைந்து செயல்பட வேண்டும். அதாவது ஆண், பெண் இருவருடைய மனமும் இணைந்து செயல்பட வேண்டும்

உறவில் உச்சம் உடலுறவின் வெற்றியே ஆண், பெண் இருவரும் உச்சத்தை எட்ட வேண்டும் என்பது தான். ஆணோ பெண்ணோ உச்சத்தை அடைவது இரண்டு பேரின் கையிலும் தான் இருக்கிறது.

ஆணின் உச்சம் ஆண்கள் என்னதான் முயற்சி செய்தாலும் பெண்கள் நினைத்தால் தான் இருவரும் உச்சத்தை எட்ட முடியும். அதேபோல் உச்சம் என்பது உடலுறவில் மட்டும் தான் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் உடலுறவையும் தாண்டி சில ஈர்ப்பான விஷயங்களும் ஆண்களை காம உச்சத்துக்கு அழைத்துச்செல்கின்றன. அப்படி என்ன மாதிரியான தருணங்களில் ஆண்கள் உச்சத்தை எட்டுகிறார்கள் என்று பார்ப்போம்.

தொடுதல் ஆண் மகிழ்ச்சியாக பெண்ணின் உடலை உரசும்போதும் தொடும் போதும் கூட உச்சத்தை எட்டுவதுண்டு.


முத்தம் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது பெண்ணுக்கு முத்தம் இனிப்பதைவிட, ஆண்களுக்கே அதிக சுவாரஸ்யத்தைத் தருவதாக அமையும். அதனால் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள்ளும்போதும் கூட ஆண்கள் உச்சமடைகிறார்கள்.

உறவுக்குப் பின் முத்தம் உறவுக்கு முன்னும், உறவின்போதும் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்ளும் முத்தத்தைவிட, உறவுக்குப் பின் இருவரும் திருப்தியடைந்த பின்கொடுத்துக்கொள்ளும் முத்தம் தான் இருவருக்குமே தங்களுடைய பெருங்காதலை வெளிப்படுத்துவதாக அமையும்.

எதிர்பார்ப்பு பெரும்பாலான ஆண்களுக்கு பாலுறவின் மீதான எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருந்து கொண்டேயிருக்கும். அந்த எண்ண ஓட்டத்தால் அந்தரங்கப் பகுதி மற்றும் விதைப்பையை நோக்கி ரத்த ஓட்டம் வேகமாகப் பாய ஆரம்பிக்கும். அதனால் தானாகவே உச்சத்தை எட்டுவார்கள்.

பாலியல் இச்சை ஏதேனும் பாலியல் சார்ந்த கதைகள் கேட்கும்போது, படங்கள் பார்க்கும்போது அதனால் உண்டாகும் கிளர்ச்சியால் உச்சம் ஏற்படும்.

பல்வேறு நிலைகளில் ஆண்கள் உச்சமடைகிறார்கள்.

Thanks

OneINdia

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *