அருகம்புல் சாகுபடி மாதம் 50,000 அசத்தல் வருமானம்

சென்னை ஆவடி பருத்திபட்டை சேர்ந்த திரு.தயாளன் அவர்களுக்கு வயது 26. இவரின் கல்வி தகுதி பட்டையம் எந்திரவியல். ஆனால் இன்று விவசாயம் செய்து வரும் இவரின் விவாசய யுத்திகளை நமது சிறு தொழில் முனைவோர் .காம் இணைய இதழுக்காக இங்கு பகிர்ந்து உள்ளார்.

பட்டையம் முடித்து வேலைக்கு சென்றால், இன்றைய சூழ்நிலையில் மாதம் 6000 மட்டுமே சம்பளமாக பெற முடியும் என்று என் நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன். எனது அப்பா செய்து வரும் விவசாயத்தை நாமும் பார்க்கலாம் என்று எண்ணி விவசாயத்தில் இறங்கினேன்.

விவசாயத்தில் தினமும் வருமானம் பெற என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தேன். அப்பொழுதுதான் சந்தையில் அருகம் புல் மற்றும் கீரைக்கு இருக்கும் சந்தை வாய்ப்பு என்னை ஈர்த்தது. எனவே அருகம் புல் மற்றும் கீரை சாகுபடி செய்யலாம் என்று தீர்மானித்து, 1 ஏக்கர் நிலத்தை 20வது பகுதிகளாக பிரித்து ஒரு நாள் இடைவெளியில் 1 ஏக்கர் முழுவதும் அருகம் புல் விதைத்து எனது விவசாய தொழிலை தொடங்கினேன். விதைத்த 30 கழித்து அறுபடை செய்ய தொடங்கினேன், சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகில் இருந்ததால் எனக்கு விறுபனை செய்வது எளிதாக இருந்தது.

அதாவது 5 சென்ட் நிலத்தில் இருந்து 15 நாள் ஒன்றுக்கு 3000 வரை வருமானம் கிடைத்தது. ஒரே நாளில் விவசாயம் செய்து ஒரே நாளில் சந்தை படுத்தினால், விலை இருக்காது என்பதால் தினமும் 5 சென்ட் நிலத்தில் மட்டும் அறுவடை செய்து, தினமும் சந்தைக்கு கொண்டு சென்றேன். எனவே தினமும் 3000 ரூபாய் எளிதாக சம்பாதிக்க முடிந்தது.

இடு பொருள் மற்றும் வேலை ஆட்கள் செலவு போக, 5 சென்ட் நிலத்தில் இருந்து மதம் 4000 ரூபாய் வருமானம் விதம் 1 ஏக்கரில் இருந்து மதம் 40,000 ரூபாய் பெற முடியும் என்பதை அனுபவம் மூலம் உணர்ந்தேன். இதை போல் கீரை மற்றும் துளசி 1 ஏக்கரில் நிலத்தில் மதம் 40,000 வருவாய் பெற்றுத்தருகிறது.

எனவே என்னிடம் மீதம் இருந்த 6 ஏக்கர் நிலத்திலும் அனைத்து வகையான கீரைகளும், துளசி மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்து உள்ளேன். சந்தையில் இந்த பயிர்களுக்கு தினமும் தேவை இருப்பதால், சந்தை வாய்ப்பு சிறப்பாக உள்ளது. மழை காலங்களை தவிர்த்து, மீதம் உள்ள காலங்கள் முழுவதும் குறைந்த பசன வசதி இருந்தாலே இந்த பயிர்களை சாகுபடி செய்வது எளிது.இடு பொருள் மற்றும் வேலை ஆட்கள் செலவு போக, 5 சென்ட் நிலத்தில் இருந்து மதம் 4000 ரூபாய் வருமானம் விதம் 1 ஏக்கரில் இருந்து மதம் 40,000 ரூபாய் பெற முடியும் என்பதை அனுபவம் மூலம் உணர்ந்தேன். இதை போல் கீரை மற்றும் துளசி 1 ஏக்கரில் நிலத்தில் மதம் 40,000 வருவாய் பெற்றுத்தருகிறது.

எனது விவசாய அனுபவத்தின் மூலம், 1 ஏக்கர் நிலத்தில் மாதம் 50,000 சம்பாதிக்க முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் எனக்கு இல்லை. மேலும், விவசாயம் நல்ல இலாபம் தரும் தொழில் ஆகும், ஆனால் உடல் உழைப்பு அதிகம். உடல் உழைப்பு அதிகம் என்பதாலும், இன்றைய தேவை, விவசாய யுக்திகள் மற்றும் சந்தை படுத்தும் வழி தெரியாமல் பயிர் செய்து விட்டு, உழவு தொழிலே வேண்டாம் என்று கூறுவது மிக பெரிய தவறு ஆகும்.

மேலும் இவரிடம் அனைத்து வகையான கீரைகளும், துளசி, அருகம்புல் மற்றும் காய்கறிகளும் தினமும் புத்தம் புதிதாக (FRESH) கிடைக்கும்

மேலும் இவரை வாழ்த்த :
திரு. தயாளன் அவர்கள்
வேலம்மாள் பள்ளி அருகில்,
பருத்தி பட்டு, ஆவடி. சென்னை
போன் :99400 59617.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *